என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மைத்ரிபால சிறிசேனா"
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்து உள்ளது.
பா.ஜனதா கட்சி 303 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
வருகிற 30-ந்தேதி (புதன் கிழமை) டெல்லியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
கடந்த முறை பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு ஏராளமான சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். இந்த முறை உலக நாடுகளின் தலைவர்களை அழைக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
உலக நாடுகளுடன் இந்தியா இணக்கமாக இருப்பதைக் காட்டும் வகையிலும், ஜனநாயகத்தில் தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் பதவி ஏற்பு நிகழ்ச்சி இருக்க வேண்டும் என பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தில் இருக்கும் பி-5 நாட்டு தலைவர்களை அழைக்க மோடி முடிவு செய்துள்ளார். அதே போல அண்டை நாடுகளான பாகிஸ்தான்- இலங்கை அதிபர்களையும் அழைக்க மோடி விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் முடிவு செய்த பின்னர். ஒரிரு நாட்களில் இது குறித்து அதி காரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க எந்தெந்த நாட்டு தலைவர்களை அழைப்பது என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை. பிரதமராக பதவி ஏற்ற பின்னர் அடுத்த மாதம் மோடி அரசுமுறை பயணமாக வெளிநாடு சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் பூடான், கிர்கிஸ்தான் நாட்டு தலைவர்களையும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இலங்கை குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கிழக்கு மாகாணத்தில், மனித வெடிகுண்டாக தயாராக இருந்தவர்கள், போலீசாரை எதிர்கொண்டபோது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்காக புதிய, கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும். விசா வாங்காமல் இலங்கையில் மத பிரசங்கம் செய்பவர்கள், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #srilankablasts #RanilWickremesinghe
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
இந்த கோர சம்பவத்தையடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளும் அவசரகால சட்டத்தின் கீழ் தடை செய்யப்படுவதாகவும், அந்த அமைப்புகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா அறிவித்தார்.
இந்நிலையில் இலங்கையில் மேற்கொண்டு தாக்குதல்களை தடுக்கும் விதமாக மற்றொரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிக்காப் முக திரைகள், மாஸ்குகள், புர்காக்கள் போன்றவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு மக்களை எளிமையாக அடையாளம் காணவும், பாதுகாப்பு கருதியும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. #MaithripalaSirisena #SrilankanBlasts
* இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தலைமை போலீஸ் அதிகாரி புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். தொடர் குண்டுவெடிப்பு குறித்த உளவு தகவல் முன்கூட்டியே கிடைத்தும், செயல்பட தவறியதற்காக அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
* இலங்கையில் மாடம்பி என்ற இடத்தில் உள்ள சர்வதேச பள்ளியில் ஒரு வெளிநாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். அவர் ஒரு மனித வெடிகுண்டு போன்ற தோற்றத்தில் உள்ளார். அவரிடம் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இல்லை.
பயங்கரவாதிகளுக்கு அவர் பயிற்சி அளித்தவரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
* தொடர் குண்டுவெடிப்பு குறித்த உளவு தகவலை இலங்கைக்கு நாங்கள் அளிக்கவில்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் உளவு தகவல் அளித்ததாக இலங்கை மந்திரி ஹர்ஷா டி சில்வா கூறியதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் இந்த மறுப்பை அளித்துள்ளார். தாக்குதல் பற்றி அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரியாது என்றும் அவர் கூறினார்.
* நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பழிவாங்க இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாக இலங்கை மந்திரி ருபன் விஜேவர்த்தனே கூறி இருந்தார். அதை இலங்கை முஸ்லிம் கவுன்சில் துணைத்தலைவர் ஹில்மி அகமது நிராகரித்துள்ளார்.
“இரண்டு தாக்குதல்களுக்கும் இடைப்பட்ட கால அளவு மிகவும் குறுகலானது. இந்த அவகாசத்தில், இவ்வளவு பெரிய தாக்குதலை திட்டமிட முடியாது. எனவே, இரண்டுக்கும் முடிச்சு போடுவது அபத்தமானது” என்று அவர் கூறினார். #SrilankanBlasts #Sirisena
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய நேற்று விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா, திருப்பதி உதவி கலெக்டர் மகேஷ்குமார் மற்றும் எஸ்.பி. அன்புராஜன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
பிற்பகல் 2 மணிக்கு திருமலைக்கு வந்த இலங்கை அதிபர் சிறிசேனா பத்மாவதி கெஸ்ட் ஹவுசில் ஓய்வெடுத்தார். பின்னர் ஸ்ரீவாரி பாதத்தை சாமி தரிசனம் செய்தார்.
இன்று அதிகாலை 3 மணிக்கு குடும்பத்தினருடன் சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து 6.30 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவருக்கு லட்டு பிரசாதங்களை வழங்கினர். #Tirupati #Sirisena
ஐ.நா. பொது சபைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. அதில் உரையாற்ற இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின் போது கடைசி 2 வாரங்களும், 5 முறை ராணுவ மந்திரி பொறுப்பிலும் அதிபர் சிறிசேனா இருந்தார். அவரது உத்தரவின் பேரில் தான் 70ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என இலங்கை தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே இவர் ஒரு சந்தேகத்துக்குரிய போர் குற்றவாளி என்பதை ஐ.நா. பொதுசபை உறுப்பினர்களுக்கும், சர்வதேச ஊடகங்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன் கூட்டியே தெரிவித்து இருந்தது. மேலும் போர் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை ராணுவத்தை விடுவிக்க புதிய யோசனை வைத்திருப்பதாக சிறிசேனா கூறியிருந்தார்.
மேற்கண்ட காரணங்களுக்காக அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. #SrilankaPresident #MaithripalaSirisena
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவையும், முன்னாள் ராணுவ மந்திரியும், ராஜேபச்சே தம்பியுமான கோத்தபய ராஜபக்சேவையும் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புத்துறை அதிகாரி நமல் குமாரா தெரிவித்தார்.
இந்த தகவலை பயங்கரவாத விசாரணை பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி நலாகா டி. சில்வா தன்னிடம் இதுபற்றி கூறியதாகவும் தெரிவித்தார்.
இவர் தன்னிடம் பேசிய ஆடியோ ஆவணத்தை சி.ஐ.டி. பிரிவு போலீசாரிடம் குமாரா ஒப்படைத்தார். அதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் எம்.தாமஸ் என்ற இந்தியர் குமாரா வீட்டுக்கு சென்று இருந்தார்.
இவர் இந்த சதி திட்டம் குறித்து தனக்கு தெரியும் என அவரிடம் கூறினார். அதையடுத்து தாமசை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் ஊழல் தடுப்புத் துறை அதிகாரி நமல்குமாரா மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு முன்னாள் தலைமை அதிகாரி நலாசா டி சில்வா பேசிய ஆடியோவின் உண்மை தன்மையை ஆராயுமாறு சி.ஐ.டி. பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
கைது செய்யப்பட்ட இந்தியர் தாமஸ் சுற்றுலா விசாவில் இலங்கை சென்றிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட நாளைவிட அதிக காலம் அங்கு சட்ட விரோதமாக தங்கியிருப்பதாகவும், குமாராவுடன் தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. #SrilankanPresident #MaithripalaSirisena
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் முடிந்த 9-வது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் நடந்தது. அதில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம். ஆனால் அவர்களது அடையாளத்தை அழிக்க முடியவில்லை. அவர்கள் வெளிநாடுகளில் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இலங்கையில் சுதந்திரம் (தமிழ் ஈழம்) பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
அதற்காக வெளிநாடுகளில் மிகவும் தீவிரமாக உள்ளனர். காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க கடந்த மாதம் லண்டன் சென்று இருந்தேன். அப்போது அங்கு எனக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் 2009-ம் ஆண்டு மே 18-ந்தேதி போரில் கொல்லப்பட்டார். அதன்பிறகு வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா கடந்த 2015-ம் ஆண்டு ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு தமிழர்கள் பெரும் ஆதரவு அளித்தனர். #LTTE #SrilankanPresident #MaithripalaSirisena
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்